தமிழியற் புலம் (School of Tamil)
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழியற் புலமானது பன்னாட்டளவில் தமிழாய்வுகளை மேம்படுத்தி, ஆய்வியல் புலங்களை ஒருங்கிணைத்து, மாணவர்களின் மொழியாளுமையையும் , படைப்பாக்கத்தினையும் செம்மையாக்கி, உலகளாவிய மானுடர்களாக உருவாக்கும், உன்னத நோக்கங்களை கொண்டதாகும். இந்தச் சீரிய நோக்கங்களின் அடிப்படையில் இளங்கலை மற்றும் முனைவர்பட்ட ஆய்வுத்துறையினைத் தமிழியற்புலம் அறிவுலகத்திற்கு அளிக்கின்றது. உயரிய செயல்பாட்டிற்கு இப்புலத்துடன் அங்கம் வகிக்கும் நா.மகாலிங்கம் தமிழாய்வுமையமும் பெருந்துணை புரிகின்றது.
நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம்
உலகளாவியத் தமிழ் உயராய்வுகளை மேற்கொள்ளும் சிறந்த ஆய்வுக்களமாக நா.மகாலிங்கம் தமிழாய்வு மையம் விளங்குகின்றது.
- புதுமைநோக்கில் ஆய்வுத்துறைகளின் அடிப்படையில் பகுத்து, முறைப்படுத்தப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஆய்வு நூல்கள் அடங்கிய இம்மையத்தின் ஆய்வுநூலகம் இந்திய அளவில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
- ஆய்வுமைய நூலகம் தமிழியல் ஆய்வுகளுக்கும், அறிவு மற்றும் தரவுத்தேடலுக்கும் பெருந்துணை நல்குகிறது.
- உலகத் தரக்குறியீட்டோடு வெளிவரும் இம்மையத்தின் ஆய்விதழும் உலகளவிலான தமிழியல் ஆய்வுகளை ஊக்குவித்தும் நிதி நல்கியும் மேம்படுத்துகின்றது.
முனைவர்பட்ட ஆய்வுத்துறை
- தமிழியல் சார்ந்த ஆய்வுக்களங்களில், தமிழ் உயராய்வுகளை மேற்கொள்வதற்கான சிறந்த களமாக முனைவர்பட்டத் ஆய்வுத்துறை திகழ்கின்றது.
- நிலவியல், தொல்லியல், மானிடவியல், கலையியல், மொழியியல், நவீனவியல் போன்ற சமகாலத்தைய தமிழியல் ஆய்வுக்களங்களில் ஆய்வுகளை முன்னெடுக்கும் வசதிகளையும், ஆய்வு ஊக்கத்தொகை, ஆய்வு நூலகம் உள்ளிட்ட சிறந்த வாய்ப்புகளையும் இத்துறை பெற்றுள்ளது.
- முறையே நான்கு முழுநேர மற்றும் பகுதிநேர ஆய்வாளர்களுக்கான இடங்களையும் அவர்களை நெறிப்படுத்தும் சிறந்த நெறியாளர்களையும் இத்துறை கொண்டுள்ளது.
- பாரதியார் பல்கலைக்கழகத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்ட ஆய்வுகளை இத்துறை முன்னெடுக்கின்றது. தமிழியல் ஆய்வுசார்ந்த ஆழ்ந்த புலமையினை பெறுவதற்கு இத்துறைப் பெரிதும் துணைநல்கும்.
இளங்கலைத் தமிழ் இலக்கியம் (படைப்பாக்கம்)
- இளங்கலைப் பிரிவில் ஒரு புதுமை நோக்கிய பாடம் தமிழ் இலக்கியம் (படைப்பாக்கம்) ஆகும். மாணவர்களின் படைப்பாக்கத் திறனையும் மேம்படுத்தும் களமாக இப்பிரிவு விளங்குகின்றது.
- தமிழின் இலக்கிய, இலக்கண அடிப்படைகளுடன் அதை படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தும் நுட்பங்களையும், படைப்பின் அங்கங்களாகத் திகழும் இன்றைய ஊடகம், மொழிபெயர்ப்பு, புனைவிலக்கியம் படைத்தல் போன்ற கூறுகள் சார்ந்த அறிவினையும், பயிற்சியினையும் இப்பாடப்பிரிவு அளிக்கின்றது.
- திரைப்படத்துறை, செய்தித்துறை, படைப்பாக்கம், மொழிபெயர்ப்புத்துறை, பொருண்மை உருவாக்கத்துறை, இணையத் துறைகள், மெய்ப்புத் திருத்தும் துறை, பேச்சுத்துறை, பதிப்புத்துறை உள்ளிட்ட வேலைவாய்ப்புகள் நிறைந்த சமகாலத் துறைகளில் உடனடி வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கும் இந்தப்பாடம் பெருந்துணைப் புரிகின்றது.
Tamil – Newsletter